எலுமிச்சையின் விலை சடுதியாக அதிகரிப்பு

சந்தையில் எலுமிச்சையின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு கிலோகிராம் எலுமிச்சை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது .

பொதுவாக 200 ரூபாய் முதல் 300 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் எலுமிச்சையின் விலை பல வாரங்களாக சடுதியாக அதிகரித்துள்ளது.

மழை இல்லாததால் எலுமிச்சை அறுவடை குறைந்துள்ளமையே விலை உயர்வுக்குக் காரணம் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.