கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் சுற்றுலா பகுதி குச்சவெளி கடற்கரை சிரமதானம்

திருகோணமலை குச்சவெளி பிரதேச 221ஆவது படைப் பிரிவின் புதிய இராணுவ கட்டளையிடும் அதிகாரி பொறுப்பேற்றதன் பின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கிளீன் ஸ்ரீலங்கா திட்டமானது சுற்றுலா பகுதியான குச்சவெளி கடற்கரையின் கரடி மலை பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம் பெற்றது.

இதன் போது குறித்த கரையோரப் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட பல கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டதுடன் இதில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் யூசூப் ரஹ்மான், இராணுவ அதிகாரிகள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.