17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம்

சீன எரிசக்தி நிறுவனமானது, ஸ்கொட்லாந்தில் மிகப்பெரிய காற்றாலையை அமைப்பது தொடர்பாக நடத்தி வந்த பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தப் பேச்சுவார்த்தைக்கு தற்போதே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, ரூ.17 ஆயிரம் கோடியில் (இந்திய மதிப்பில்) ஸ்காட்லாந்தில் காற்றாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு ஸ்கொட்லாந்தின் ஆர்டெசியர் (Ardersier) நகரம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இதன்மூலம் அந்தப் பகுதியைச் சேர்ந்த 1,500 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என ஸ்கொட்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.