ஐரோப்பாவின் சிறந்த பல்கலைக்கழகமாக ETH சூரிச் மீண்டும் தெரிவு
நேற்று வியாழக்கிழமை ஐரோப்பாவின் சிறந்த பல்கலைக்கழகமாக ETH சூரிச் மீண்டும் தெரிவு.வெளியிடப்பட்ட 2026 டைம்ஸ் உயர் கல்வி தரவரிசைப்படி, சுவிஸ் தொழில்நுட்ப நிறுவனமான ETH சூரிச் ஐரோப்பா கண்டத்தின் சிறந்த பல்கலைக்கழகமாகத் தொடர்ந்து இடம்பிடித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளைப் போலவே, 2026 ஆம் ஆண்டிற்கான தரவரிசையில் ETH சூரிச், சர்வதேச அளவில் 11வது இடத்தில் உள்ளது.
அதேவேளை, சுவிஸ் பெடரல் தொழில்நுட்ப நிறுவனம் லொசேன் (EPFL) மூன்று இடங்கள் பின்தங்கியுள்ளது.
எனினும், லொசேன் பல்கலைக்கழகம் இதுவரை இல்லாத வகையில், சர்வதேச அளவில் 125வது இடத்தைப் பிடித்துள்ளது.
பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.
தொடர்ச்சியாக பத்தாவது முறையாக, பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், உலகின் சிறந்த பல்கலைக்கழகமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டைப் போலவே, அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (யுகே) ஆகியன மூன்றாவது இடத்தில் உள்ளதுடன் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம், ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் முதலிடத்தில் இருந்தாலும், சீனா தலைமையிலான கிழக்கு ஆசியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் முன்னணியில் இருப்பதாக டைம்ஸ் உயர் கல்வி தெரிவித்துள்ளது.
ETH சூரிச்சைத் தொடர்ந்து சீனாவில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகம் மற்றும் பீக்கிங் பல்கலைக்கழகம் உள்ளன.