பாட்டலிக்கு இழப்பீடு வழங்க ரஞ்சன் ஜெயலாலுக்கு உத்தரவு
மின்சாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் தவறான அறிக்கையை வெளியிட்டதாக, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வழக்கு இற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சாரத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ரஞ்சன் ஜெயலால் மீது தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி, பாதிக்கப்பட்ட பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ரஞ்சன் ஜெயலாலுக்கு உத்தரவிட்டுள்ளது.