உள்ளூராட்சி வார நிகழ்வின் பரிசில் வழங்கல்
-யாழ் நிருபர்-
உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று புதன்கிழமை பிரதேச சபையின் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வானது தவிசாளர் ச.ஜயந்தன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானமும், சிறப்பு விருந்தினராக வட மாகாண சுற்றுலா பணியக பணிப்பாளர் திருமதி.பே.யசோதாவும் கலந்துகொண்டனர்.
உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் இதன்போது வழங்கிவைக்கப்படன. அத்துடன் பெண்களுக்கான வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டன கலைநிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வினை அலங்கரித்தன.




