காலையில் பதிவான தங்கத்தின் விலை பிற்பகல் வேகமாக அதிகரிப்பு!

தங்க விலையானது நேற்று மதியம் வரை  24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 320,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பிற்பகல் அளவில் திடீரென 8000 ரூபாயால் அதிகரித்து 328,000 ரூபாயாக அதிகரித்தாக தெரிவிக்கப்படுகின்றது

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 328,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 303,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,925 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

உலகின் பொருளாதார மற்றும் அரசியல் நிலை குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளைத் தேடுவதால், தங்கத்தின் விலை முதல் முறையாக இவ்வாறு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.