முத்து நகர் விவசாயிகளின் 21 ஆவது நாள் சத்தியாக் கிரகப் போராட்டம்

-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை – முத்துநகர் விவசாயிகளின் தொடர் சத்தியாக்கிரகம் தொடர்ந்தும் நேற்று செவ்வாய் கிழமை 21 ஆவது நாளாகவும் இடம்பெற்றது.

விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு,

இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்!
எனவும் பதாகைகளை ஏந்தியும் காட்சிப்படுத்தியும் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.