இந்தியாவின் 2வது பெரிய கிரிக்கெட் மைதானம்
அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் பீகாரில் கட்டப்பட்டுள்ளது.
ராஜ்கிரில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
இந்த மைதானம் 90 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1,121 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
புனேவிலிருந்து உயர்தர கருப்பு மண்ணைப் பயன்படுத்தி இந்த மைதானத்தின் ஆடுகளம் உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த மைதானத்தில் 40,000 இருக்கைகள் உள்ளன.
இந்த மைதான கட்டுமானத்தின் ஆரம்பச் செலவு ரூ.740 கோடியாக மதிப்பிடப்பட்டது.
ஆனால் நவீன வசதிகள் மற்றும் கூடுதல் கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டதால் ரூ.1,121 கோடி செலவானது குறிப்பிடத்தக்கது.