டூட் ட்ரைலர் திகதி அறிவிப்பு

டூட் திரைப்படத்தின் ட்ரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் – இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘டூட்’. மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான ‘ஊறும் பிளட்’ பாடல் இரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்துள்ளது.

இந்த நிலையில், டூட் திரைப்படத்தின் ட்ரைலரை நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.