பேனா வடிவிலான துப்பாக்கியுடன் ஒருவர் கைது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கி, 02 தோட்டாக்கள் மற்றும் 05 பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து குண்டுகளுடன் காலி, நாகொடை பகுதியில் ஒருவர் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாபலகம பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
