உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் புதிய விலைப்பட்டியல்

பேலியகொட மற்றும் கொழும்பு – புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.

இதன்படி, வெலிமடை உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 180 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரையிலும், நுவரெலியா உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 220 ரூபாயிலிருந்து 230 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அத்துடன், பாகிஸ்தான் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 165 ரூபாயிலிருந்து 175 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

உள்ளூர் சின்ன வெங்காயம் ஒரு கிலோகிராம் 200 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரையிலும், இந்தியன் சின்ன வெங்காயம் 230 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தம்புள்ளை பெரிய வெங்காயம் 120 ரூபாயிலிருந்து 140 ரூபாய் வரையிலும், இந்தியன் பெரிய வெங்காயம் 110 ரூபாயிலிருந்து 130 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

செத்தல் மிளகாய் ஒரு கிலோகிராம் 600 ரூபாயிலிருந்து 630 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.