கார் விபத்தில் சிக்கிய விஜய் தேவர்கொண்டா

நடிகர் விஜய் தேவர்கொண்டா பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹைத்ராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையில் தெலுங்கானாவின் ஜொகுலம்பா கட்வால் மாவட்டத்தித்திற்கு சென்றுகொண்டிருந்தபோது விஜய் தேவர்கொண்டா பயணித்த கார் மீது மற்றுமொரு கார் வேகமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் விஜய் தேவர்கொண்டாவின் கார் லேசான சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, விபத்தில் விஜய் தேவர்கொண்டா உட்பட காரில் பயணித்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.