மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தயார் : மஹிந்த ஜயசிங்க

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் அவர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை மதிப்பிட்ட பிறகு, அதிகாரிகளுக்கு அவர் தெரிவித்தால், பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று திங்கட்கிழமை கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நிலைமையை மதிப்பீடு செய்த பிறகு, பாதுகாப்பு வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று அரசாங்கம் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளதாகக் அவர் கூறினார்.