கருப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கவுள்ள தபால் பணியாளர்கள்
தபால் மா அதிபர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தபால் பணியாளர்களும் எதிர்வரும் 9 ஆம் திகதி கருப்புப்பட்டி அணிந்து பணியில் ஈடுபடவுள்ளதாக, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷண தெரிவித்துள்ளார்.
அத்துடன், தபால் பணியாளர்கள், முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவை பெற்றுள்ளதாக தபால் மா அதிபர் வெளியிட்டுள்ள கருத்துக்கு, தபால் தொழிற்சங்க ஒன்றியம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
தபால் மா அதிபரால் எந்தவொரு விசாரணையும் இல்லாமல் பணியாளர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கடுமையாக எதிர்ப்பதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.