
ரஷ்யாவின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்திய உக்ரைன்
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இன்று ரஷ்யாவின் முக்கியமான எண்ணெய் நிலையம் மற்றும் வெடிபொருள் தொழிற்சாலை மீது உக்ரைன் இராணுவம் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த தொழிற்சாலை ரஷ்யப் படைகளுக்கு வெடிபொருட்கள் வழங்கும் முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
அத்துடன் கிரீமியா உட்பட 14 மாகாணத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதை ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது.
போர் தொடங்கிய பிறகு உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
