2020க்கு பின்னர் நாட்டில் பிறப்பு எண்ணிக்கையில் வீழ்ச்சி : இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு நாட்டின் பிறப்பு எண்ணிக்கையானது 80,945 ஆல் குறைவடைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், கடந்த ஆண்டு கொழும்பு மாவட்டத்தில் அதிக பிறப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, 1,200 ஆண் குழந்தைகளும் 1,246 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளனர்.

அத்துடன், மிகக்குறைந்த பிறப்புகள் முல்லைத்தீவு பகுதியில் இருந்து பதிவாகியுள்ளன.

அங்கு 50 ஆண் குழந்தைகளும் 50 பெண் குழந்தைகளுமாக 100 பேர் மாத்திரமே பிறந்துள்ளனர்.

அதேநேரம், கண்டி மாவட்டத்தில் பிறப்பு எண்ணிக்கை 1,471 ஆக பதிவாகியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் பிறப்பு எண்ணிக்கை 779 ஆக பதிவாகியுள்ளது.

2020 ஆம் ஆண்டு நாட்டின் பிறப்பு எண்ணிக்கை 301,706ஆகவும் கடந்த ஆண்டு பிறப்புக்களின் எண்ணிக்கை 220,761 ஆக பதிவாகியுள்ளது.

இந்த தரவுகளின் அடிப்படையில், கடந்த வருடத்தில் மொத்தமாக 10,611 ஆண் குழந்தைகளும் 11,305 பெண்கள் குழந்தைகளும் பிறந்துள்ளன.

இதேவேளை, கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இறப்புக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும் பதிவாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது.