இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலஞ்ச, ஊழல் தொடர்பில் 4,500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் .

.2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இலஞ்ச,ஊழல் சம்பவங்கள் தொடர்பில் 4,500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இக்காலப் பகுதியில் 4,626 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகளுக்கு அமைய, 85 தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

கைது செய்யப்பட்டவர்களில், பெரும்பாலானோர் பொலிஸார் என தெரிவிக்கப்படுகிறது .

நீதி அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களைச் சேர்ந்த 9 பேரும், மூன்று கிராம உத்தியோகத்தர்களும், இரண்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் நீதிமன்றங்களில் 61 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம், கடந்த 2024 ஆம் ஆண்டில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட 44 வழக்குகள் நிறைவடைந்துள்ள நிலையில், 29 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் மேலும் 276 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.