காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை நாளாந்தம் முன்னெடுக்கப்படுகிறது
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் அனைத்து நாள்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, செவ்வாய்க் கிழமை தவிர்ந்த, கிழமையில் ஆறு நாள்களும் கப்பல் சேவை இடம்பெற்றது..
இதேநேரம் தீபாவளியை முன்னிட்டு, இந்த மாதம் 8ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை தினமும் கப்பல் சேவை இடம்பெறும் என கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பண்டிகை காலத்தில் அனைத்து நாள்களிலும் சேவையை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கப்பல் சேவையில் தீர்வை அற்ற கடைத் தொகுதியும் ( Duty free) புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
