நகைக் கடையில் திருடிய இளம் தம்பதியினர் கைது

கண்டியில் ஒரு நகைக் கடைக்குள் நகை வாங்குவதாகக் கூறி உள்ளே நுழைந்து நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் ஒரு இளம் திருமணமான தம்பதியினரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலத்துஓயா எதுல்கம பகுதியைச் சேர்ந்த 20-22 வயதுக்குட்பட்ட தம்பதியினர் என்று தெரியவந்துள்ளது.

நகைக் கடையிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, கண்டி காவல் தலைமையகத்தின் குற்றப்பிரிவு உடனடியாக அந்த அழைப்பை ஏற்று, அதிகாரிகள் நகைக் கடைக்குச் சென்று, திருடப்பட்ட நகைகளை மறைத்து வைத்திருந்தபோது சந்தேகத்திற்கிடமான தம்பதியினரைக் கைது செய்தனர்.

மேலும்இ முக்கிய வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட நகைகளின் ஒரு பங்கு மீட்கப்பட்டுள்ளதுஇ அத்துடன் இந்த ஜோடி வேறு ஏதேனும் நகைக் கடைகளுக்கு சென்றுள்ளதா என்பதைக் கண்டறிய பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.