அழகால் நேர்ந்த ஆபத்து

பதுளை – மடுல்சீமை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 9 பேர் லுணுகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மடுல்சீமை பகுதியில் உள்ள சிறிய உலக முடிவை பார்வையிட இன்று அதிகாலை வந்தவர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகி உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குருணாகல் மற்றும் மல்வான பகுதியில் இருந்தே அவர்கள் சிறிய உலக முடிவை பார்வையிட வந்துள்ளதாக மடுல்சீமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.