
கஜேந்திரகுமார் – தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் இடையே கலந்துரையாடல்!
-யாழ் நிருபர்-
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரும், ஆன்மீகத் தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகனை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, அநுர அரசாங்கம் மிகவிரைவில் கொண்டுவரவுள்ள ஏக்கிய இராச்சிய (ஒற்றையாட்சி) அரசியல் யாப்பினுடைய ஆபத்துக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரால் தெளிவுபடுத்தப்பட்டது.
தெல்லிப்பளை துர்க்கையம்மன் வளாகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் கலந்துகொண்டார்.
