2018இற்கு பின்னர் மீண்டும் அமெரிக்க அரச பணிகள் முடக்கம்
அமெரிக்க அரசாங்கம் அத்தியாவசியமற்ற சேவைகளை இடைநிறுத்தியுள்ள நிலையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
முன்னதாக அமெரிக்க செனட்டில், குறை நிரப்பு நிதி சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாமையால் அமெரிக்காவின் நிதி ஓட்டத்தில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் சம்பளமின்றி விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.அத்துடன், அரச சேவைகள் பல இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த, 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அமெரிக்க அரச பணிகள் மீண்டும் முடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம் நேற்று, முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன .
இதனைத் தொடர்ந்து, ஆளும் குடியரசு கட்சியும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும், பரஸ்பரம் ஒரு தரப்பின் மீது ஒரு தரப்பு குற்றம்சாட்டி வருகின்றனர்.
“சட்ட விரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களுக்குச் சுகாதார பாதுகாப்பை நீடிக்க ஜனநாயகக் கட்சியினர் முயன்றதன் விளைவாக, நிதி பற்றாக்குறை ஏற்பட்டு அரச நிர்வாகம் முடங்கியுள்ளதாகக் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேநேரம் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் தலைவர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நல்லெண்ணத்துடன் செய படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
