முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று காலை வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.