புதிதாக 14 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்!

புதிதாக 14 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக ஜி.எல்.ஏ. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் கேகாலை பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற பிரதி பொலிஸ்மா அதிபர் ஒஷான் ஹேவவிதாரனவுக்கு பதிலாக ஜி.எல்.ஏ. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, புதிதாக 10 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.