மரத்தளபாட உற்பத்தி நிலையத்தில் தீ!

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்தில் நேற்று புதன்கிழமை இரவு ஏற்பட்ட  தீ ப்பரவலில் அங்கிருந்த பலகைகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த மரத்தளபாட உற்பத்தி நிலைய உரிமையாளர் நேற்று மாலை வியாபார நிலையத்தை பூட்டி விட்டு வீடு சென்ற பின் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

அதை அவதானித்தவர்கள் உரிமையாளருக்கு அறிவித்தனர்.

அதன்பின்னர் உரிமையாளரினால் கரைச்சி பிரதேச சபை தீயணைப்பு பிரிவுக்கு தெரியப்படுத்திய நிலையில் பிரதேச சபை தீயணைப்பு வாகனம் வருகை தந்து மக்களும் இணைந்து பல மணி நேரம் போராடி பெரும் முயற்சிக்கு பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் அங்கிருந்த பெறுமதியான மரங்கள் தீயில் எரிந்து கருகிபோயுள்ளன.