ஆப்கானிஸ்தானில் இணையச் சேவைகள் வழமைக்கு திரும்பின

ஆப்கானிஸ்தான் முழுவதும் முடங்கியிருந்த இணையச் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்குப் பின்னர் அங்கு இணையச் சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் அவ்வப்போது முடக்கப்படுகின்றன.

இணையச் சேவைகள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை, ஆப்கானிஸ்தானை வெளி உலகத்திலிருந்து முற்றிலுமாகத் துண்டித்ததாக்கத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தலிபான் பிரதமரின் உத்தரவுக்கு அமைய இணையச் சேவை மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .