இலங்கையில் விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டமாக அனுராதபுரம்
இலங்கையில் விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம் என்ற விசேட அந்தஸ்தை அனுராதபுரம் விரைவில் பெறவுள்ளதாக விலங்கு நலன் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் மருத்துவர் சமித் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டார் .
அனுராதபுரம் மாநகரசபைக்கு உட்பட்ட 30 முக்கிய இடங்களில் விசர்நாய் கடி ஒழிப்புத்திட்டம் ஆரம்பிப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த இரண்டு ஆண்டுகளில், மாவட்டத்திலுள்ள சுமார் 80 சதவீதமான நாய்களுக்குக் கருத்தடை செய்யப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர் சமித் நாணயக்காரதெரிவித்தார் .
இதேநேரம் இந்தத் திட்டத்துக்கு அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்காத போதிலும், அனுராதபுரம் மாநகரசபை, அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் குறித்த இலக்கை அடைய முடிந்துள்ளதாக மருத்துவர் சமித் நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்
