பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படுகின்றதா?

சமீபத்திய எரிபொருள் விலைக் குறைப்பின்படி, பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியுமா என்பது குறித்து அரசாங்கம் நாளைய தினத்திற்குள் தீர்மானத்தை வெளியிடும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) வழக்கமாக ஒரு குறிப்பிட்ட அளவுகோலின்படி பேருந்துக் கட்டணங்களைக் குறைக்கும் என்றும், அந்த அளவுகோலின்படி பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க முடியுமா என்பதை இன்று கணக்கிடும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

எரிபொருள் விலைகள் தற்போது 2 சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலைக் குறைப்புக்கு ஏற்ப பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க முடியுமா என்பது குறித்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாகவும், அவர்கள் இன்று அதனை பரிசீலித்து, பேருந்துக் கட்டணங்களைக் குறைக்க முடியுமா என்பதை நாளைக்குள் தெரிவிப்பார்கள்,” என்று அவர் கூறினார்.