ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி : பூஜை செய்ய உகந்த நேரம்

கல்விக்கு அதிபதியும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளை வைத்து சரஸ்வதி தேவியை பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாளாகும்.

உடல் வலிமையின் சக்தியாக துர்க்கா தேவியையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தைத் தரவல்ல சக்தியாக மகாலட்சுமியையும், அறிவையும் ஆற்றலையும் தரவல்ல கல்வியின் தேவதையாக சரஸ்வதி தேவியையும் நாம் வழிபட்டு அந்த தேவியரின் அருள்பெற்று வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றினையும் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே நவராத்திரி.

இன்று புதன்கிழமை வீடு, கல்விக் கூடங்கள், தொழில் நிறுவனங்களிலும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையைப் பொதுமக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரம் 1 ஒக்டோபர் 2025 (புதன் கிழமை)
காலை 9.00 – 10.00
மதியம் 1.30 – 3.00
மாலை 4.00 – 5.00
இரவு 7.00 – 10.00

விஜயதசமி மற்றும் மறு பூஜை செய்ய உகந்த நேரம் 2 ஒக்டோபர் 2025 (வியாழக்கிழமை)
காலை 9.00 – 10.30
மதியம் 1.00 – 1.30
மாலை 4.30 – 7.00