மானிப்பாயில் food city உரிமையாளர் ஹெரோயினுடன் கைது

-யாழ் நிருபர்-

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள food city ஒன்றின் உரிமையாளர் நெப்டம்பர் 28 இரவு 400 மில்லிகிராம் ஹெரோயினுடன் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின்போது குறித்த சந்தேகநபர் இவ்வாறு ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரின் வீடு மற்றும் வாகனங்கள் என்பன பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சோதனையிடப்பட்டன. இருப்பினும் எந்தவிதமான பொருட்களும் மீட்கப்படவில்லை.