ஆசிய லீ மான்ஸ் தொடர்: காரை அறிமுகம் செய்தார் அஜித்குமார்

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார்.

இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தநிலையில் அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.

இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்.

இதற்கமைய குறித்த தொடரில் அஜித்குமார் LMP3 எனும் ரேஸிங் அணி பயன்படுத்தும் ரேஸ் காரை நரேன் கார்த்திகேயன் உடன் இணைந்து அஜித்குமார் அறிமுகம் செய்தார்.

இது தொடர்பான புகைப்படங்களை அஜித்குமார் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.