சபுகஸ்கந்த சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய 15 சிறுவர்களில் 5 பேர் கைது!

கம்பஹா -சபுகஸ்கந்த மாகொல சிறுவர் இல்லத்திலிருந்து தப்பி ஓடிய 15 சிறுவர்களில் 05 பேர் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர்கள் குறித்த இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தப்பி ஓடிய 15 சிறுவர்களில், 4 சிறுவர்களைத் தவிர, மீதமுள்ள 11 சிறுவர்களும் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டவர்கள் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தப்பியோடியவர்களில் இருவர், ஏற்கனவே, குறித்த இல்லத்தில் இருந்து தப்பிச் சென்று, பின்னர், இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்