கிண்ணியாவில் பஸ் – டிப்பர் மோதி விபத்து!

-கிண்ணியா நிருபர்-

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், நேற்று திங்கட்கிழமை ஆயிலியடியிலிருந்து கிண்ணியா நோக்கி சென்ற பஸ் மீது டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

ஆயிலியடியிலிருந்து கிண்ணியா நோக்கி புறப்பட்ட பஸ் வண்டி சூரங்கல் அல் அமீன் பாடசாலைக்கு முன்னால் உள்ள பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றும் வேளையில் , பின்னாலிருந்து வந்த டிப்பர் வாகனம் பஸ் வண்டியை முந்தி செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் பயணிகள் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை, பஸ் வண்டியின் முன் பகுதி சேதமடைந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.