பிரபாஸ் இறுதியாக நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
இத்திரைப்படம் 1100 கோடி ரூபாய் வசூலித்திருந்தது.
இதனை தொடர்ந்து, அடுத்ததாக மாருதி இயக்கத்தில் பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் திகதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் ஒக்டோபர் இறுதியில் மொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் திகதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, ராஜாசாப் திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.