ரயிலின் இயந்திரப் பகுதியில் சிக்கிக் கொண்ட பெண் மீட்பு
-மஸ்கெலியா நிருபர்-
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதத்திம் நேற்று ஞாயிற்றக்கிழமை மதியம் 1:30 மணியளவில் இயந்திரப் பகுதியில் மோதியதில் பெண் ஒருவர் சிக்கிக் கொண்டதால் படு காயங்களுடன் மீட்டனர்.
இந்த விபத்து ஹட்டன் மல்லியப்பு சந்திக்கு அருகில் ஏற்பட்டடுள்ளது.
குறித்த நபர் ரயில் மோதுண்டு படு காயமடைந்த நிலையில் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனால் நீண்ட நேரம் மக்கள் காத்திருக்க நேரிட்டது என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஹட்டன் பொலிசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
