கரூர் சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்குப் பதிவு
தமிழகத்தின் கரூர் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் உட்பட 3 பேர் மீது, கரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பொதுச்செயலாளர் புஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேநேரம் இந்த சம்பவம் தொடர்பில் தமிழக அரசு நியமித்த ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நேற்றையதினம் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் சம்பவ இடத்தினை பார்வையிட்டதுடன் பொதுமக்கள் மற்றும் பொலிஸாரிடம் விபரங்களைக் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது
