பொலன்னறுவையில் குரங்குகளுக்கு நோய் பரவல் தொடர்பில் எச்சரிக்கை

பொலன்னறுவை மற்றும் கிரித்தலே பகுதிகளில் குரங்குகளிடையே ஒருவகை நோய் பரவி வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நோய் மனிதர்களுக்கும் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை புனித நகரைச் சுற்றி அதிக எண்ணிக்கையில் கட்டுப்பாடின்றி திரியும் குரங்குகள் இருப்பதால், நோய் பரவும் அபாயம் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது .

பொலன்னறுவை மற்றும் கிரித்தலேயில் உள்ள குரங்குகளின் அதிகப்படியான எண்ணிக்கைப் பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வரும் மற்றும் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாகும் உள்ளது .

இந்த ஆபத்து இருந்தபோதிலும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு மிகக் குறைவாகவே உள்ளது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், நோய் என்னவென்று கண்டறியவும் வனவிலங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தற்போது நோய்வாய்ப்பட்ட குரங்குகளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.