கடுவெலயில் சடலம் மீட்பு
கடுவெல பாலத்துக்கு கீழ் களனி கங்கையிலிருந்து, அழுகிய நிலையில் நிர்வாணமாக காணப்பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கடுவள பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
குறித்த நபர் சுமார் நான்கு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர் .
உயிரிழந்த நபர்அணிந்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நீண்ட கால்சட்டையின் கீழ்ப்பகுதி கட்டப்பட்டிருந்தாகவும் கட்டப்பட்ட பகுதிக்குள் கற்கள் நிரப்பப்பட்டு, அதை இடுப்புடன் சேர்த்துக் கட்டியிருப்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு கற்களைப் பயன்படுத்தி சடலத்தை ஆற்றில் மூழ்கடிக்க முயற்சி செய்திருக்கலாம் என கடுவெல பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
