கரூரில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

தமிழகத்தின் அரசியல் கட்சியொன்றின் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு சனநெரிசலில் சிக்குண்டு உயிரிழந்தோரின் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டம் கரூரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.

இதனால், அதிகரித்த கூட்ட நெரிசல் காரணமாக நேர்ந்த இந்த துயரச் சம்பவத்துக்குத் தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.