அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு
-அம்பாறை நிருபர்-
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி ஊடாக போட்டியிட்டு உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான செயலமர்வு செப்டம்பர் 26,27 மற்றும் 28 ஆகிய தினங்களில் மட்டக்களப்பு சர்வோதயம் மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.
அக்கட்சியின் தேசிய தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது கட்சியின் தவிசாளர் முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ் அமீர் அலி மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. அஷ்ரப் தாஹிர் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.
இச்செயலமர்வின் வளவாளர்களாக உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. ஐங்கரன் மற்றும் விவசாய அமைச்சின் பிரதான கணக்காளர் திரு. உதய ராஜன் ஆகியோர் தொழிற்பட்டருந்தனர்.
முதலாவது நாள் செயலமர்வில் உள்ளூராட்சி மன்றங்களின் நிதி சார் நடைமுறைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்த பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இச்செயலமர்வில் இலங்கை பூராகவும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
