
27 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு : சந்தேகநபர்களை கைது செய்த கோப்பாய் பொலிஸார்!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் வர்த்தக நிலையம் ஒன்றினை உடைத்து அதிலுள்ள பொருட்களை திருடிய 19,27,30 மற்றும் 32 வயதுடைய சந்தேகநபர்கள் நால்வர் நேற்று வெள்ளிக்கிழமை கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வர்த்தக நிலையமானது கடந்த வியாழக்கிழமை இரவு உடைக்கப்பட்டு 27 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டிருந்தன.
இந்நிலையில் வர்த்தக நிலைய உரிமையாளர் இது குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
அந்தவகையில் விரைந்து நடவடிக்கை எடுத்த கோப்பாய் பொலிஸார் குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் கைது செய்ததுடன் களவாடிய பொருட்களையும் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
