புதிய பாடத்திட்டத்தின் ஆசிரியர் பயிற்சி திட்டங்கள் நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் – நாலக கலுவேவ
2026 ஆம் ஆண்டில் தரம் 1 தொடக்கம் 6 ஆம் வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டம் தொடர்பான ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.
இந்த நோக்கத்திற்காக TOT (பயிற்சியாளர்களின் பயிற்சி) திட்டத்தின் சுமார் 80 சதவீதம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள குழு மஹரகமவில் உள்ள தேசிய கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருவதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர மேலும் குறிப்பிட்டார்.
அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் கோட்பாட்டு மற்றும் நடைமுறை அறிவு கொண்ட பயிற்சி குழுக்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
இந்தப் பயிற்சியை முடித்த பயிற்சியாளர்கள் நவம்பர் மாதத்திற்குள் வலய மற்றும் கோட்ட மட்டங்களில் ஆசிரியர்களுக்கான பயிற்சியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை அச்சிடும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
