
மோட்டார் சைக்கிளில் பொருட்களை திருடிய சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலர் வீதியில் , தரித்து நின்ற மோட்டார் சைக்கிளில் இருந்து, பொருட்கள் திருடிய நபரொருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – சாய்பாபா ஆலயத்திற்கு, நேற்று வழிபாட்டிற்கு வந்த யாழ் நல்லூர் பகுதியை சேர்ந்த யுவதியின் மோட்டார் சைக்கிளில் இருந்தே இந்த திருட்டு பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை, சிசிரிவி காணொளியை வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையில் , குறித்த நபர் நுணாவில் பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
