தனியார் பேருந்து மீது முறிந்து வீழ்ந்த மரம்!
கொழும்பு, புறக்கோட்டை – ஓல்கொட் மாவத்தையில், தனியார் பேருந்து மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
புகையிரத தலைமையகத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இந்தநிலையில், குறித்த வீதியில் ஒரு வழி போக்குவரத்து மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றமையால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
