தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,669 மில்லியன் ரூபாய் நிதி செலுத்தப்பட்டுள்ளது
தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 669 மில்லியன் ரூபாய் நிதி செலுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
நெல், சோளம், மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்செய்கைகளுக்காக 81ஆயிரத்து 234 விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
இதேநேரம் கால்நடை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு காப்பீட்டுத் திட்டங்கள்
செயற்படுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை
தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் நிதி சொத்துகள் 2,491 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது .
