கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு-கொழும்பு நெடுஞ்சாலை சுத்தம் செய்யும் நிகழ்வு!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் A-11 மட்டக்களப்பு-கொழும்பு நெடுஞ்சாலையினை சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தலைமையகம், 23வது இராணுவ டிவிசன் ராணுவத்தினர் மற்றும் ICST பல்கலைக்கழகம், கோறளைப்பற்று வடக்கு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைகளும் இணைந்து, புனானை தொடக்கம் நாவலடி சந்தி வரையான 15 கிலோமீற்றர் A-11 பிரதான வீதி சிரமதானம் செய்யப்பட்டது

குறித்த வீதியில் குப்பைகளையும் கழிவுகளையும் வீதியில் இருபக்கங்களும் விசி விட்டு செல்வதினால் காட்டு யானைகள் குப்பைகளை சாப்பிட வருகின்றன. இதனால் யானை-மனித மோதல் இடம்பெறுகின்றது.

அதன்படி சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் குப்பை கூளங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உரிய முறைப்படி அகற்றப்பட்டது

நிகழ்வில் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பல்லே கும்புரா மற்றும் 23 டிவிஷன் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரியங்கா குணதிலகாக, படையனிகளின் உயர் அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், இராணுவத்தினர், ICST பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.