உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

பேலியகொட மற்றும் கொழும்பு – புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதன்படி, வெலிமடை உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 190 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரையிலும், நுவரெலியா உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 220 ரூபாயிலிருந்து 230 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அத்துடன், பாகிஸ்தான் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 160 ரூபாயிலிருந்து 165 ரூபாய் வரையிலும் இந்தியன் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

உள்ளூர் சின்ன வெங்காயம் ஒரு கிலோகிராம் 220 ரூபாயிலிருந்து 240 ரூபாய் வரையிலும், இந்தியன் சின்ன வெங்காயம் 220 ரூபாயிலிருந்து 240 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம் சின்ன வெங்காயம் ஒரு கிலோகிராம் 150 ரூபாயிலிருந்து 180 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளைப்பூடு ஒரு கிலோகிராம் 340 ரூபாயிலிருந்து 350 ரூபா வரையிலும், செத்தல் மிளகாய் ஒரு கிலோகிராம் 600 ரூபாயிலிருந்து 630 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.