கேபிள் கார் அறுந்து வீழ்ந்ததில் 7 பௌத்த பிக்குகள் உயிரிழப்பு!

குருநாகலை – மெல்சிரிபுர நா உயன பகுதியில், நேற்று புதன்கிழமை பிக்குகளை ஏற்றிச் சென்ற கேபிள் கார் (Cable car) அறுந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் இரண்டு ரஷ்ய பிக்குகளும், கம்போடிய பிக்கு ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் குருநாகலை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் குறித்த கேபிள் காரில் 13 பிக்குமார் பயணித்துள்ளனர்.