
கணவனின் நாயும் மனைவியின் பூனையும் சண்டை : திருமணமாகி 9 மாதங்களிலேயே விவாகரத்து பெற்ற தம்பதி!
இந்தியாவின் அஹமதாபாத் போபால் பகுதியில் செல்லப்பிராணிகள் மீதான அன்பின் காரணமாக, போபாலை சேர்ந்த ஒரு தம்பதியினர், திருமணமான ஒன்பது மாதங்களிலேயே விவாகரத்து கோருகின்றனர்.
செல்லப்பிராணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக அவர்கள் விவாகரத்தை கோருகின்றனர்.
கணவரின் நாய் மனைவியின் பூனையைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் மனைவி தனது செல்லப்பிராணியைப் பிரிக்க மறுத்துள்ளார்.
இதனையடுத்து, இருவரிடையே ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்ப்பதற்கு, மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை மற்றும் குடும்ப முயற்சிகள் வெற்றியளிக்காததால், தம்பதியினர் விவாகரத்து கோரினர்.
